Posts

Showing posts with the label #tamilquotes #tamilkavitai #nib #judgement #proudmoment #tamilwriter#brokennib #pen #realstory

பெருமிதம் / தமிழ் கவிதை/ நீதி

Image
பேனாவின் முனை தான் மரணிக்கும் நேரத்தில் கூட பெருமிதம் கொள்கிறது.  காரணம் தவறு செய்த ஒருவருக்கு சரியான தீர்ப்பு வழங்கி விட்டது என்பதால். ஒருவருக்கு மரண தண்டனை கொடுத்த பிறகு நீதிபதி தன் கையிலுள்ள பேனா முனையை உடைப்பார்.  இதன் அர்த்தம் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்தியா  ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடு.  அவர்கள் ஆட்சி செய்த போது கடைபிடித்த இந்த பழக்கம் இன்றும் தொடர்ந்து வருகிறது நம் நாட்டில். நீதிபதி தன் கையிலுள்ள பேனாவால் மரண தண்டனை என்ற தீர்ப்பை எழுதிய பிறகு இனி இந்த பேனா மற்றொருவரின் உயிரையும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக பேனாவின் முனையை உடைக்கின்றனர்.  சட்டப்புத்தகத்தில் மரண தண்டனைக்கு பிறகு பேனாவின் முனையை உடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.