அடிமைத்தனம்/ அன்பு/ தமிழ் கவிதை
அடிமைத்தனத்தின் ஆபத்து:
அடிமைத்தனம் என்பது சரியான ஒன்றா?? இல்லை . இருப்பினும் நாம் பல வேளைகளில் அடிமைப் படுகின்றோம். மொபைல், டி.வி, அன்பு போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். அன்பில் ஏற்படுகின்ற அடிமைத்தனம் என்பது மிகப் பெரிதான ஆபத்தை ஏற்படுத்தும். தான் அன்பு செலுத்தும் நபர் வேறு நபரிடம் பேசும் போது வரும் கோபம், ஒருவர் நம்மை விட்டு பிரிந்து சென்று மற்றொரு நபரிடம் இணக்கமாகும் போது வரும் பழிவாங்கும் தன்மை போன்றவை அன்பின் அடிமைத்தனத்திற்கு அறிகுறி. பல வேளைகளில் நாம் பெற்றோரை விட எதிர்பால் அன்பில் ஈர்க்கப்பட்டு அடிமைப் படுகின்றோம். இந்த அடிமைத்தனம் மிகப் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். காரணம், எதிர்ப்பால் அன்பு நம்மை விட்டு பிரியும் நேரம் பல ஆண்டுகள் வளர்த்த பெற்றோரை மறந்து தன் வாழ்வை முடித்துக் கொள்ள கூட தயங்காது. அன்பு செலுத்துவது தவறில்லை ஆனால் , அடிமைப்படாமல் நாம் இருக்கிறோமா என்பதில் கவனம் தேவை. அன்பில் அடிமைப்பட்ட யாரேனும் இருந்தால் ஒருமுறை உங்கள் பெற்றோரை நினைத்து பாருங்கள். பின்பு தவறான முடிவு எடுப்பதை கைவிட்டுவிட்டு உங்கள் எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றும் மீண்டும் அடிமைப்படாமல் இருக்க கவனமாக இருங்கள்.
Comments
Post a Comment