தகுதி/ தமிழ் கவிதை/ motivational quotes
நண்பர்களே! பல நேரங்களில் நாம் விரும்பிய ஒன்று நமக்கு கிடைக்காமல் போகலாம். அதற்காக தவறான முடிவுகள் எடுத்து விடக்கூடாது. சில கால காத்திருப்பிற்கு பிறகு சில மனிதர்களுக்கு அவர்கள் விரும்பிய ஒன்று கிடைக்கும். சில மனிதர்கள் காத்திருந்தாலும் அவர்கள் விரும்பிய ஒன்று கிடைக்காது. அவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே!.... நீ விரும்பிய ஒன்று உனக்கு கிடைக்கவில்லை என்றால் உன்னை அடைய அதற்கு தகுதி இல்லை என்பது மட்டுமே. மனம் உடைந்து எதிர்மறை சிந்தனை உன்னில் உருவாகாமல் இருக்க வேண்டும். நேர்மறை சிந்தனை நிறைந்து எதையும் ஏற்றுக்கொண்டு வாழும் வாழ்க்கையை மன நிறைவுடன் வாழ வேண்டும்.
Comments
Post a Comment