அடித்தளம்/ அவமானம்/ தமிழ் கவிதை

   நீ போகும் இடமெல்லாம் அவமானத்தை சந்திக்கின்றாயா?? இன்று நீ அடையும் அவமானங்கள் தான் நீ உயர்வதற்கு அடித்தளமாக இருக்கும். நீ அடையும் அவமானத்தை மறந்து விடாதே. அதே நேரத்தில் மனதில் பழிவாங்கும் உணர்ச்சியை கொண்டு வராதே. அவமானங்களை உன் மனதில் சேமித்து வை. அதை உன் உயர்வுக்கு அடித்தளமாக அமை. உன்னை அவமானப்படுத்திய வர்களுக்கு நன்றி கூறு. ஏனென்றால் அவர்கள் உன்னை அவமானப்படுத்தவில்லை என்றால் நீ உயர்ந்திருக்க முயற்சிகள் செய்திருக்க மாட்டாய்.

Comments

Popular posts from this blog

இலக்கு / motivational quotes