பெண் மன ரகசியம்/ தமிழ் கவிதை/ பெண்ணை பற்றிய சில தகவல்கள்
ரகசியம்:
பெண் என்பவள் ஆழ்கடலை போன்றவள். அவள் மறைத்து வைத்துள்ள சோகங்கள் ஆயிரம். ஆழ்கடல் எப்படி தனக்குள் பல ரகசியத்தை ஒளித்து வைத்துள்ளதோ அதே போல் ஒரு பெண்ணும் பல ரகசியங்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள். ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான தருணங்களை கண்டுபிடிப்பது எளிது. ஆனால் அவள் மறைத்து வைத்துள்ள சோகங்களை கண்டுபிடிப்பது கடினம். அறிவியல் வளர்ந்த போதும் கண்டுபிடிக்கப்படாத ஆழ்கடல் ரகசியங்கள் உள்ளன. அதுபோலவே மொழிபெயர்க்கப்படாத ரகசியங்கள் பெண்ணிடமும் உள்ளது. பெண்ணின் மௌனம் மொழிபெயர்க்கப்பட்டு உண்மை வெளிவந்தாலும் அவள் ரகசியங்கள் வெளிவரும் போவதில்லை அவளாக நினைக்காத வரை.
Comments
Post a Comment