Life quote/ tamil kavitai/ QueenQuotes/ வாழ்க்கைக்கு சில வரிகள்
ஆசை எல்லாருக்கும் இருக்கும். நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைப்பது தவறான ஒன்று. இன்றைய வாலிபர்கள் அப்படி தான் தவறான முடிவு எடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். சின்ன சின்ன விஷயத்தில் கூட பொறுமை கிடையாது. சின்ன வயசுல காதல் என்கிற மாய வலையில் விழுந்து பரிவு அல்லது ஏமாற்றம் வரும் போது தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். பிரிவு அல்லது ஏமாற்றம் வரும் போது வாலிபர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கை நீங்கள் விரும்பியதை விட சிறப்பான ஒன்றை கொடுக்கும் என்று. தவறான முடிவு எடுப்பதை கைவிட்டுவிட்டு வாழ்க்கை கற்றுத்தந்த பாடத்தை மனதில் பதித்து இலக்கை நோக்கி ஓடு. நீ எதிர்பாராத நேரத்தில் சிறப்பான ஒன்றை வாழ்க்கை உனக்காக தரும்.
Comments
Post a Comment