வாழ்க்கை கவிதை/ QueenQuotes
நம்முடைய வாழ்க்கையில் பெற்றோர், உடன்பிறப்புகள், நட்பு வட்டம், கணவன், மனைவி என் எத்தனை உறவுகள் இருந்தாலும் நம்மை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் நாம் வாழும் வாழ்க்கையை வெறுப்போடு வாழ்வோம். இல்லையென்றால் மனதிற்குள் அழுதுகொண்டு தனிமையை தேடி ஓடுவோம். நம்மை புரிந்துகொள்ளாத ஒருவரிடம் எத்தனை முறை நம் பக்கம் உள்ள நியாயத்தை கூறினாலும் நம்மை நம்ப மாட்டார்கள். அதேசமயம் நம்மை புரிந்து கொண்ட ஒருவரிடம் விளக்கங்கள் எதுவும் கூறவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய மௌனமே நம் சூழ்நிலையை மொழிபெயர்த்து காட்டிவிடும். வாழ்க்கையில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நம்மை புரிந்துகொண்ட உறவு இருப்பது என்பது அரிதானது. நம்மை புரிந்துகொண்ட ஓர் உறவு நம் வாழ்க்கையில் இருந்தால் அவர் கடவுள் தந்த வரமே 😍.
Comments
Post a Comment