புன்னகை/ பெண்ணை பற்றிய சில தகவல்கள்/ பெண்களை மதிப்போம்/ QueenQuotes
ஆண்கள் தங்கள் மன வலிகளை குடும்பத்திடமிருந்து மறைத்து தன்னை ஒரு மகிழ்ச்சியான நபராக காட்டிக் கொள்வார்கள். அதுபோலவே பெண்களும் தங்களது மன வலி மற்றும் உடல் வலியை ஒற்றை புன்னகையில் மறைத்து தன் குடும்பத்திற்காக வாழ்வர். பெண் என்று ஏளனமாக பார்க்கும் இந்த உலகில் அவள் தாண்டி வந்த தடைகள் அநேகம். எதிர்த்து போராடிய சவால்கள் அநேகம். இது எதுவும் அறியாத இந்த உலகம் அவளை பெண் என்று ஏளனமாக பார்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து தப்பிக்க அவள் மேற்கொண்ட முயற்சிகள் ஆயிரம். அத்தனை வலிகளையும் தாண்டி தன் ஒற்றை புன்னகையில் தன்னை வலியற்ற பெண்ணாக காட்டும் பெண் என்றுமே சிறந்தவள் தான். உலகம் ஆயிரம் கூறினாலும் பெண்ணை எதிர்க்க எந்த சக்தியும் இவ்வுலகில் இல்லை. பெண்ணை பெண்ணாய் மதிக்க இந்த உலகம் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்ணுக்கும் வலிகள் உண்டு என்பதை இந்த உலகம் உணர்ந்தாலே போதும் பெண் என்ற ஏளனப் பேச்சு பேச தோன்றாது. பெண்களை மதிப்போம்🙏.
Comments
Post a Comment