Posts

Showing posts from October, 2022

கலையின் ரகசியம்

Image
       பெரும்பாலான மக்கள் தங்களது கவலையை பிற மனிதர்களிடம் கூறி ஆறுதல் காண முயல்வர். சிலர் அழுது கவலையை போக்க முயற்சி செய்வர். ஆனால் ஒரு கவிஞன் மட்டுமே தனது கவலையை கலையாக்குவான். இந்த உலகம் அவனை முட்டாள் என்றாலும் அவனது வலிகளை மறைக்க முடியாத கண்ணீரை பேனாவின் முனை வழியே வெளியேற்றி அவன் கவலைகளை கவிதைகளாக தாளில் அடக்கம் செய்வான்....

புன்னகை 😊

Image
      மனதில் வலிகள் ஆயிரம் இருந்தாலும் அதனை பெரும்பாலான ஆண்கள் வெளிக்காட்டுவது இல்லை. புன்னகை என்ற முகமூடியை முகத்தில் வைத்து தன் வலிகளை மறைக்கின்றனர். அதுபோலவே தான் ஒருசில பெண்களும் தன் மன வலிகளை புன்னகை என்ற முகமூடிக்கு பின்னால் மறைத்து வாழ்கின்றனர். ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களது புன்னகையை மொழிபெயர்க்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் அந்த ஒற்றை புன்னகையில் மறைந்து கிடக்கும் ஓராயிரம் அர்த்தங்கள்!!! 

அவமானம்

Image
வாழ்க்கையில் அவமானம் வந்து விட்டது என்பதற்காக தற்கொலை என்பது சரியான முடிவு கிடையாது. தற்கொலை என்பது கோழைத்தனம். உன் வாழ்வில் வரும் அவமானங்களை சேகரித்து உரமாக்கிக் கொள் உன் வெற்றிக்காக!! அவமானங்களை உரமாக்கியவன் தோல்வியை கண்டதாக சரித்திரம் இல்லை.