Posts

Showing posts from May, 2023

தனியாக போராடு யாரையும் எதிர்பார்க்காதே......

Image
        வாழ்க்கை ஒரு போர்க்களம். ஒவ்வொருவரின் வாழ்விலும் பல தடைகள் சவால்கள் இருக்கும்.. அந்த சவால்களை சந்திக்க நாம் தனியாக தான் போராட வேண்டும். உன் வெற்றிக்கு யாரும் உதவாத போது தனியாக போராடு. உன்னை பிறர் வெறுக்கும் போது தனியாக போராடு. உன்னை ஒதுக்குபவரிடம் மீண்டும் போய் காலில் விழாத. உன்னை அவமானப்படுத்தும் இடத்தில் கால் வைக்காதே.  உன் வாழ்வில் நீ கீழே விழ விழ மீண்டும் எழுந்து வா. உன்னை தடுக்க யாரும் இல்லை இந்த உலகில். காயப்பட்ட சிங்கத்திற்கு வலி அதிகம். அது போல காயப்பட்ட இதயத்திற்கும் வலி அதிகம். வலிக்கிறது என்று ஒதுங்கி விடாதே. போராடு வலிகளில் மட்டுமே புது வழிகள் பிறக்கும் ✨💯. 

கவனிக்கும் பழக்கம் உன்னிடம் இருக்கிறதா??

Image
            வாழ்க்கையில் வாய்ப்புகள் கொடுக்கப்படாத போதும் கவனிக்கும் செயலை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்.  வாழ்க்கை ஒரு விளையாட்டு போன்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடினம் மட்டுமே தோன்றும்.  அந்த கடினத்திலும் நம்மை கீழே தள்ளி விட ஒரு கூட்டம் காத்திருக்கும். பிறர் கரம்  நாடாமல் இருக்க பிறர் செய்யும் வேலைகளை நன்றாக கவனிக்க வேண்டும்.  நம்மை உயர விடாமல் தடுக்க பிறர் நம்மை தனியாக விடும் போது, நமக்கு கற்று தர வேண்டிய விசயங்களை அவர்கள் கற்று தராமல் இருக்கும் போதும் நாம் என்றோ ஒரு நாள் கவனித்த விஷயங்கள் மட்டுமே நமக்கு கை கொடுக்கும்.. கவனிக்கும் பழக்கம் உன்னிடம் இருந்தால் நீயும் சாதனையாளனே....