தனியாக போராடு யாரையும் எதிர்பார்க்காதே......
வாழ்க்கை ஒரு போர்க்களம். ஒவ்வொருவரின் வாழ்விலும் பல தடைகள் சவால்கள் இருக்கும்.. அந்த சவால்களை சந்திக்க நாம் தனியாக தான் போராட வேண்டும். உன் வெற்றிக்கு யாரும் உதவாத போது தனியாக போராடு. உன்னை பிறர் வெறுக்கும் போது தனியாக போராடு. உன்னை ஒதுக்குபவரிடம் மீண்டும் போய் காலில் விழாத. உன்னை அவமானப்படுத்தும் இடத்தில் கால் வைக்காதே. உன் வாழ்வில் நீ கீழே விழ விழ மீண்டும் எழுந்து வா. உன்னை தடுக்க யாரும் இல்லை இந்த உலகில். காயப்பட்ட சிங்கத்திற்கு வலி அதிகம். அது போல காயப்பட்ட இதயத்திற்கும் வலி அதிகம். வலிக்கிறது என்று ஒதுங்கி விடாதே. போராடு வலிகளில் மட்டுமே புது வழிகள் பிறக்கும் ✨💯.