Posts

Showing posts from April, 2022

Satisfaction / tamil kavitai

Image
    நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அதை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும். ஒரு செயலின் தொடக்கம் மகிழ்வாக இருக்கும் பட்சத்தில் அதின் முடிவு திருப்திகரமாக இருக்கும். ஒரு செயலை  வெறுப்போடு செய்யத் தொடங்கினால் அதன் முடிவு சரியாக இருக்காது. உதாரணமாக, படிக்கும் போது வெறுப்போடு படித்தால் படிப்பது மனதில் பதியாது. அதேசமயம் படிக்கும் போது உற்சாகமாக படித்தால் படித்த அனைத்து விஷயங்களும் மனதில் பதியும். உங்கள் தொடக்கம் மகிழ்வாக இருக்கும் பட்சத்தில் அதின் முடிவு திருப்திகரமாக இருக்கும் 💯.

மறதி/வரம்/தமிழ் கவிதை

Image
 கடந்த காலம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு வராது என்பது ஒரு வரமே. வாழ்க்கையில் மூன்று காலங்கள் இருந்தாலும் நாம் பெரும்பாலும் கவலைப்படக் கூடிய ஒரு காலம் என்பது கடந்த காலமே. கடந்த கால நிகழ்வுகள் பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும். பலர் அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பர்.பெரும்பாலும் வயதானவர்கள் விரும்புவது மறதி இல்லாத ஒரு வாழ்க்கையை. ஆனால் பெரும்பாலானோர் மறதியை விரும்புகின்றனர். காரணம் அவர்கள் கடந்த காலம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைக்கின்றனர். கடந்த கால கசப்பான நிகழ்வுகளில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு மறதிி என்றுமே ஒரு வாரமாகவே உள்ளது.

முற்றுப்புள்ளி/ Fullstop/ relationship quotes/ வாழ்க்கைக்கு சில வரிகள்

Image
   ஒரு வாக்கியத்தை எழுதி முடித்த பின்னர் நாம் முற்றுப்புள்ளி வைக்கின்றோம். அதுபோல சில உறவுகளிடத்திலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உன் வார்த்தையை யார் ஒருவர் மதிக்கவில்லையோ அல்லது யார் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லையோ அந்த உறவுகளிடம் முற்றுப்புள்ளி வைத்துவிடு. அதுவே உன் சுயமரியாதையை காக்கும். வாக்கியத்தில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எப்படி அடுத்த வாக்கியத்தை தொடங்குகிறாயோ அதுபோல உன் வார்த்தைகளை மதிக்காத உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்.

வாழ்க்கை கவிதை- QueenQuotes

Image
    நாம் வாழும் வாழ்க்கை மிக அழகானது. வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் அனுபவம் ஆழமானது. நீண்ட கால வாழ்க்கையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இருப்பினும் சுருக்கமாக கூறினால் வாழ்க்கை என்பது இதுவே 👉.  நம் அனைவருடைய வாழ்க்கையும் பிறப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் தொடங்கி வாழ்க்கையில் வெற்றி பெற பல்வேறு சவால்களை கடந்து , சாதனைகள் பல செய்து இறப்பு என்ற முற்றுப்புள்ளியில் முடிவு பெறுகிறது வாழ்க்கை.

Identity /தமிழ் கவிதை/ QueenQuotes

Image
 இந்த உலகத்தில் நம் பிறப்பு பிரபலமாகாமல் இருக்கலாம். ஏனென்றால் அது நம்மை அறியாமல் நிகழ்ந்தது. பிறப்பு என்ற ஒன்று உண்டென்றால் இறப்பும் நிச்சயம் உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம் இறப்பு எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். வாழும்போது ஒரு குறிக்கோளுடன் வாழ வேண்டும். அதற்காக வாழும் போது நமக்கென்று ஒரு அடையாளத்தை கடின உழைப்பால் உருவாக்க வேண்டும். வாழும்போது நாம் உருவாக்கும் அடையாளம், நாம் இறக்கும் போதும் நம்முடன் வரும். 

Good night/ good night quote

Image
GOOD NIGHT FRIENDS // SWEET DREAMS// HAVE A PEACEFUL NIGHT  ❤️ The answers you seek never come when the mind is busy, they come when the mind is still.

தமிழ் கவிதை/ Success/ QueenQuotes

Image

Congratulations/ முயற்சி/ motivational quotes/ ஊக்கமூட்டும் சில வரிகள்

Image
  முயற்சி என்ற ஒன்று இருக்கும் வரை வெற்றி என்ற ஒன்று உனக்காக காத்திருக்கும். மனிதர்கள் உன் முயற்சிக்கு எதிராக எதிர்மறை எண்ணங்களை உதிர்த்தாலும் மனச் சோர்வின்றி உனக்கான பாதையில் செல்லு. ஒருவேளை நீ முயற்சியை கைவிடும் அடுத்த நொடியில் கூட உனக்கான வெற்றி இருக்கலாம். உலகம் ஆயிரம் கூறினாலும் உன் கடமையை சரியாக செய். விடாமுயற்சி செய்தவன் தனக்கான பலனை அடையாமல் போனதில்லை 💯. வெற்றி பெறும் வரை தொடர்ந்து முயற்சி செய். ஒருநாள் இந்த உலகமும் உன் வசமாகும். வாழ்த்துக்கள் 💐.

அதிஷ்டம்/ Luck/ QueenQuotes

Image
நம்முடைய விருப்பங்கள் நாம் எதிர்பாராமல் நிறைவேறும் போது நம் மனதில் உதிக்கும் எண்ணமே நானும் அதிர்ஷ்டசாலி தான் என்பது 😜

புன்னகை/ பெண்ணை பற்றிய சில தகவல்கள்/ பெண்களை மதிப்போம்/ QueenQuotes

Image
  ஆண்கள் தங்கள் மன வலிகளை குடும்பத்திடமிருந்து மறைத்து தன்னை ஒரு மகிழ்ச்சியான நபராக காட்டிக் கொள்வார்கள். அதுபோலவே பெண்களும் தங்களது மன வலி மற்றும் உடல் வலியை ஒற்றை புன்னகையில் மறைத்து தன் குடும்பத்திற்காக வாழ்வர். பெண் என்று ஏளனமாக பார்க்கும் இந்த உலகில் அவள் தாண்டி வந்த தடைகள் அநேகம். எதிர்த்து போராடிய சவால்கள் அநேகம். இது எதுவும்  அறியாத இந்த உலகம் அவளை பெண் என்று ஏளனமாக பார்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து தப்பிக்க அவள் மேற்கொண்ட முயற்சிகள் ஆயிரம். அத்தனை வலிகளையும் தாண்டி தன் ஒற்றை புன்னகையில் தன்னை வலியற்ற பெண்ணாக காட்டும் பெண் என்றுமே சிறந்தவள் தான். உலகம் ஆயிரம் கூறினாலும் பெண்ணை எதிர்க்க எந்த சக்தியும் இவ்வுலகில் இல்லை. பெண்ணை பெண்ணாய் மதிக்க இந்த உலகம் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்ணுக்கும் வலிகள் உண்டு என்பதை இந்த உலகம் உணர்ந்தாலே போதும் பெண் என்ற ஏளனப் பேச்சு பேச தோன்றாது. பெண்களை மதிப்போம்🙏.

பெண் மன ரகசியம்/ தமிழ் கவிதை/ பெண்ணை பற்றிய சில தகவல்கள்

Image
 ரகசியம்:       பெண் என்பவள் ஆழ்கடலை போன்றவள். அவள் மறைத்து வைத்துள்ள சோகங்கள் ஆயிரம். ஆழ்கடல் எப்படி தனக்குள் பல ரகசியத்தை ஒளித்து வைத்துள்ளதோ அதே போல் ஒரு பெண்ணும் பல ரகசியங்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள். ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான தருணங்களை கண்டுபிடிப்பது எளிது. ஆனால் அவள் மறைத்து வைத்துள்ள சோகங்களை கண்டுபிடிப்பது கடினம். அறிவியல் வளர்ந்த போதும் கண்டுபிடிக்கப்படாத ஆழ்கடல் ரகசியங்கள்  உள்ளன. அதுபோலவே மொழிபெயர்க்கப்படாத ரகசியங்கள் பெண்ணிடமும் உள்ளது. பெண்ணின் மௌனம் மொழிபெயர்க்கப்பட்டு உண்மை வெளிவந்தாலும் அவள் ரகசியங்கள் வெளிவரும் போவதில்லை அவளாக நினைக்காத வரை.

Life quote/ tamil kavitai/ QueenQuotes/ வாழ்க்கைக்கு சில வரிகள்

Image
ஆசை எல்லாருக்கும் இருக்கும். நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைப்பது தவறான ஒன்று. இன்றைய வாலிபர்கள் அப்படி தான் தவறான முடிவு எடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். சின்ன சின்ன விஷயத்தில் கூட பொறுமை கிடையாது. சின்ன வயசுல காதல் என்கிற மாய வலையில் விழுந்து பரிவு அல்லது ஏமாற்றம் வரும் போது தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். பிரிவு அல்லது ஏமாற்றம் வரும் போது வாலிபர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கை நீங்கள் விரும்பியதை விட சிறப்பான ஒன்றை கொடுக்கும் என்று. தவறான முடிவு எடுப்பதை கைவிட்டுவிட்டு வாழ்க்கை கற்றுத்தந்த பாடத்தை மனதில் பதித்து இலக்கை நோக்கி ஓடு. நீ எதிர்பாராத நேரத்தில் சிறப்பான ஒன்றை வாழ்க்கை உனக்காக தரும்.

வாழ்க்கை கவிதை/ QueenQuotes

Image
  நம்முடைய வாழ்க்கையில் பெற்றோர், உடன்பிறப்புகள், நட்பு வட்டம், கணவன், மனைவி என் எத்தனை உறவுகள் இருந்தாலும் நம்மை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால்  நாம் வாழும் வாழ்க்கையை வெறுப்போடு வாழ்வோம். இல்லையென்றால் மனதிற்குள் அழுதுகொண்டு தனிமையை தேடி ஓடுவோம். நம்மை புரிந்துகொள்ளாத ஒருவரிடம் எத்தனை முறை நம் பக்கம் உள்ள நியாயத்தை கூறினாலும் நம்மை நம்ப மாட்டார்கள். அதேசமயம் நம்மை புரிந்து கொண்ட ஒருவரிடம் விளக்கங்கள் எதுவும் கூறவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய மௌனமே நம் சூழ்நிலையை மொழிபெயர்த்து காட்டிவிடும். வாழ்க்கையில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நம்மை புரிந்துகொண்ட உறவு இருப்பது என்பது அரிதானது. நம்மை புரிந்துகொண்ட ஓர் உறவு நம் வாழ்க்கையில் இருந்தால் அவர் கடவுள் தந்த வரமே 😍. 

அடித்தளம்/ அவமானம்/ தமிழ் கவிதை

Image
   நீ போகும் இடமெல்லாம் அவமானத்தை சந்திக்கின்றாயா?? இன்று நீ அடையும் அவமானங்கள் தான் நீ உயர்வதற்கு அடித்தளமாக இருக்கும். நீ அடையும் அவமானத்தை மறந்து விடாதே. அதே நேரத்தில் மனதில் பழிவாங்கும் உணர்ச்சியை கொண்டு வராதே. அவமானங்களை உன் மனதில் சேமித்து வை. அதை உன் உயர்வுக்கு அடித்தளமாக அமை. உன்னை அவமானப்படுத்திய வர்களுக்கு நன்றி கூறு. ஏனென்றால் அவர்கள் உன்னை அவமானப்படுத்தவில்லை என்றால் நீ உயர்ந்திருக்க முயற்சிகள் செய்திருக்க மாட்டாய்.

பெருமை/ தமிழ் கவிதை

Image
     ஒரு மனிதனின் ஆயுட்காலம் என்பது 80 வயது வரை தான். தற்போது 40 வயது வரை ஒரு மனிதன் வாழ்வது என்பது கூட கடினமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு மனிதன் நான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தேன் என்று பெருமை பாராட்டுவதை விட நான் மற்றவர்களுக்கு உண்மையாக வாழ்ந்தேன் என்று கூறுவதே மிகவும் பெருமையான விஷயம். இன்றைய காலத்தில் மனிதன் உயிருடன் வாழும் நாட்களும் குறைவு உண்மையாக வாழும் நாட்களும் குறைவு. எனவே நீ மரணித்தால் கூட வாழும் நாட்கள் வரை உண்மையாக வாழ்ந்தாய் என்ற பெயரை மக்கள் மனதில் பதி அதுவே உனக்கு பெருமையை தரும் நீ மரணித்த பிறகும்.

எழுத்துரு / கவிதை/ எழுத்தாளனின் உயிர்நாடி

Image
  நமது எண்ணங்களை மொழிபெயர்க்க சிறந்த ஒரு இடம் எதுவென்றால் அது காகிதம் தான். ஒரு எழுத்தாளன் தன் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை விட காகிதத்திடம் பகிர்ந்து கொள்ளுகிறான். ஏனென்றால் அவன் எண்ணங்களுக்கு எழுத்துக்கள் உருவம் கொடுக்கின்றன. உடலாக காகிதமும் உருவமாக எழுத்தும் இருந்து எழுத்தாளனின் எண்ணங்களை கவிதைகளாக உயிர் பெற செய்கின்றது.